ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி :

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      மதுரை
7 tmm news

திருமங்கலம். - மதுரை மாவட்டம் திருமங்கலம் பி .கே . என் மேல் நிலைப்பள்ளியில் ஒசோன்  தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய பசுமைப்டை, சாலை பாதுகாப்பு படை சார்பாக "தூய்மையைப் பேணுவோம்"தலைப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு பள்ளியின் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார் , பள்ளிப் பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்
பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ச.சியாமளா வரவேற்புரை நிகழ்த்தினார்
பள்ளிச் செயலர்சக்திவேலு பேரணியை தொடங்கி வாழ்த்துரை வழங்கினார் - காவல் துறை ஆய்வாளர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்,
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மா.ஜெயபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பகமைப் படை ஒருங்கிணைப்பாளர் திரு வீரபழனி, சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர்  செல்வபாண்டியன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து