குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
7 thami news

திண்டுக்கல், - குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் தம்பித்துரை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்ட துணை சபாநாயகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
குட்கா வழக்கில் உச்சஞிதிமன்றம் உத்தரவின் பேரிலேயே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை வெளிவந்து அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் அதற்கு ஏற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெறும் போதே ராஜினாமா
என்பது தேவையற்றது. இப்பிரச்சனையில் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று அ.தி.மு.க. அரசு மீது பழி சுமத்தி வருகிறார்கள். இப்பிரச்சனையில் 5 அதிகாரிகளை கைது செய்திருப்பது சிறைக்காவல் விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களை குற்றம் சாட்டி அதற்காக அழைத்துச் செல்லவில்லை. தமிழக நலன் கருதியே மத்திய பா.ஜ.க. மீது அ.தி.மு.க. அரசு நட்புடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து