தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில்  13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்தும் கடந்த மே 22-ம் தேதிக்குப் பிறகு, தூத்துக்குடியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடந்த சம்பவங்களையும் சேர்த்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து பொது மக்கள், பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலரும் கடந்த மே 22-ம் தேதி நடந்த சம்பவம் மற்றும் அதற்குப் பின்பு நடந்த நிகழ்வுகள் தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கருத்துகளைத் தெரிவிக்கலாம். மனுக்கள் மூலமாகவும் ஆணையத்துக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணை 2 மாத காலத்துக்குள் நிறைவடைந்து, அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 4-ம் தேதி விசாரணையை தொடங்கிய ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து