முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் செரீனா - ஒசாகா மோதல்

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ்.

செரீனா வெற்றி

அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர். இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

ஒசாகா வெற்றி...

இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா.  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து