மும்பையில் ஒரே நாளில் வெவ்வேறு ரயில் விபத்துகளில் 17 பேர் பலி

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
train 2017 01 24

மும்பை, மேற்கு மற்றும் மத்திய ரயில்வே மண்டலங்களின் கீழ் உள்ள மும்பை பிரிவு ரயில்வே நிலையங்களில்நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 17 பேர் உயிரிழந்தனர் என்று ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிகபட்சமாக கல்யாண் மற்றும் வசை பகுதி ரயில் நிலையங்களில் தலா 3 பேர் உயிரிழந்தனர். கல்யாண் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். வசை ரயில் நிலையத்தில், ஓடும் ரயில் முன்பு குதித்து இரு காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் யார் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. மற்றொரு சம்பவத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.

முன்னதாக, ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் குறித்து சமூக ஆர்வலர் சமீர் ஜவேரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் மூலமாக, 2017-ஆம் ஆண்டில் மும்பை பிரிவில் மட்டும் 3014 பேர் உயிரிழந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

பயணிகள் தண்டவாளங்களை தாண்டிச் செல்வதாலும், கூட்டம் அதிகம் உள்ள ரயில்களில் இருந்து தவறி விழுவதனாலும், ஓடும் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொள்வதனாலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து