வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      தமிழகம்
Voter-ID 2017 08 29

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

ஜனவரி 01-2019-ம் ஆண்டினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2019-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 01.09.2018 அன்று வெளியிடப்பட்டது.

பொது மக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 2019-ம் ஆண்டு ஜனவரி 01 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் படிவம் 6–னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7–னை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பட்டியலில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-னை பூர்த்தி செய்து தரவேண்டும். சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8-A வினை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இம்மையத்தில் பொது மக்கள் உரிய படிவங்களை பெறவும். பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் கொடுக்கலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் அடுத்து வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து