முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற நாடுகளில் நடைபெறும் எந்த போரிலும் பாகிஸ்தான் தலையிடாது: இம்ரான் கான்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், இனி வரும் காலங்களில் பிற நாடுகளில் நடைபெறும் எந்த போரிலும் பாகிஸ்தான் தலையிடாது. ஆரம்ப காலத்தில் இருந்தே நான் போருக்கு எதிரானவன் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவத் பாஜ்வா, உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் இம்ராம் கான் பேசியதாவது:- இனி வரும் காலங்களில் பிற நாடுகளில் நடைபெறும் எந்த போரிலும் பாகிஸ்தான் தலையிடாது. ஆரம்ப காலத்தில் இருந்தே நான் போருக்கு எதிரானவன். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

எனது அரசின் வெளியுறவுக் கொள்கை, முற்றிலும் நாட்டு மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும். அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மையையும் செயல்திறனையும் உறுதி செய்வேன்.
பாகிஸ்தானில் கனிம வளங்கள் மிகுந்துள்ளன. எனவே, உலகிலேயே சிறந்த நாடாக பாகிஸ்தானை மாற்ற வேண்டும் என்ற நமது இலக்கை அடைவதற்கு நேர்மையான உழைப்பு மட்டுமே தேவை. இவ்வறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து