அமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
amit-shah 2017 10 15

புது டெல்லி : பதவிக்காலம் முடிந்தாலும் மீண்டும் அமித்ஷாவே பா.ஜ.க.வின் தலைவராக தொடர்வார் என டெல்லி பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடக்கும் பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்தவரான அமித்ஷா, மோடி பிரதமராகும் முன்பாகவே அவருடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார். மோடி பிரதமரானதும் தலைவராக இருந்த ராஜ்நாத்சிங்கிற்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதால் 2014 ஆகஸ்ட் மாதத்தில் அமித்ஷா பா.ஜ.க. தலைவரானார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வருகிறது.

அமித்ஷா தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தியதுடன், பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமையவும் வியூகங்கள் வகுத்தவர் என்ற பெயரை பெற்றார்.  அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அமித்ஷாவே தலைவராக நீடிக்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புகின்றனர். இதனால் இவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது.

இது தொடர்பாக செயற்குழு முடிந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. பா.ஜ.க. கட்சியின் சட்டவிதிப்படி ஒருவர் இரண்டு முறை தலைவராக இருக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து