முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முகத்தை காட்டி விட்டு விமானத்தில் பயணிக்க தொழில்நுட்ப வசதி பெங்களூர் ஏர்போர்ட்டில் விரைவில் அறிமுகம்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : பெங்களூர் ஏர்போட்டில் முகத்தை மட்டுமே காட்டிவிட்டு பயணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட உள்ளது.

பேஸ் ரெக்கக்னிஷேஷன் எனப்படும் தொழில்நுட்பம் தற்போது பல ஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது. நம்முடைய முகத்தை ஸ்கிரீன் முன் காட்டினால் அதுவே நம்மை அடையாளம் கண்டுபிடித்து, லைக்கை திறந்து விடும். இதை தான் பெங்களூர் விமான நிலையத்தில் கொண்டு வர இருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் இந்த வசதி பெங்களூரில் வர உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, பெங்களுர் விமான நிலையத்தில் சில விமான சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளுக்கு ஆவண சோதனைகளை மொத்தமாக நிறுத்த போகிறார்கள். அதற்கு பதிலாக முகத்தை ஆராயும் பேஸ் ரெக்கக்னிஷேஷன் கருவிகளை வைக்க போகிறார்கள். நம்முடைய ஆதார் தகவல் மூலம் இதை வைத்து நம்மை அடையலாம் காண்பார்கள்.

இதன் மூலம் பணிகள் மிகவும் வேகமாக நடக்கும். எந்த கவுண்டரிலும் நீங்கள் நிற்க வேண்டியது இல்லை. அதே போல் ஒரு நொடியில் நீங்கள் யார், உங்கள் பின்புலம் என்னவென்று அதிகாரிகளுக்கு தெரியும். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்படும்.

பேஸ் ரெக்கக்னிஷேஷன் சாதனம் முன் போய் நின்றால் அதுவே நம் ஆதார் விவரங்களை வைத்து சோதனைகளை முடித்து விடும். ஆதாருடன் பாஸ்போர்ட்டை இணைத்து இருக்கும் பட்சத்தில் அந்த சோதனையையும் முடித்து விடும். டிக்கெட்டை மட்டும் காட்டி விட்டு விமானத்தில் பயணிக்கலாம்.

ஆசியாவிலேயே இந்த முறை எங்குமே கிடையாது. முதல்முறையாக பெங்களூரில்தான் கொண்டு வரப்பட உள்ளது. அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் உலகிலேயே அதிக மக்கள் செல்லும் விமான நிலையத்தில் பேஸ் ரெக்கக்னிஷேஷன் பயன்படுத்தப்படும் விமான நிலையம் என்று பெயரை பெங்களூர் விமான நிலையம் பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து