உயிருடன் இருக்கும் பாலிவுட் நடிகைக்கு இரங்கல் தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
BJP MLA 2018 9 8

மும்பை : உயிருடன் இருக்கும் நடிகைக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் இரங்கல் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை காட்கோபரில் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. ராம் கதம் கூட்டத்தில் இருந்த இளைஞர்களை பார்த்து உங்கள் காதலுக்கு நான் நூறு சதவீதம் உதவி செய்வேன். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் எம்.எல்.ஏ. ராம்கதம். இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ராம் கதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து