டெல்லி சுகாதாரத் திட்டம்: பான்-கீ-மூன் பாராட்டு

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
Ban-Ki-Moon 2018 09 08

புதுடெல்லி, டெல்லி அரசு செயல்படுத்தி வரும் சுகாதாரத் திட்டமான மொஹல்லா கிளினிக்குகளை (ஆரம்ப சுகாதார மையம்) ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான்-கீ-மூன் தலைமையிலான "தி எல்டர்ஸ்' பிரதிநிதிகள் குழு  நேரில் பார்வையிட்டது. அப்போது, "மொஹல்லா கிளினிக்குகள் திட்டம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது' என்று பான்-கி-மூன்
தெரிவித்தார்.

மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலா தோற்றுவித்த அமைதி மற்றும் மனித உரிமைகளுக்காகப் பாடுபடும் "தி எல்டர்ஸ்' எனும் அமைப்பில் பான்-கீ-மூன், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநரும், நார்வே நாட்டின் முதல் பெண் பிரதமருமான க்ரோ ஹார்லெம் புருண்ட்லேண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு டெல்லி ஆம் ஆ த்மி அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பீராஹரி மொஹல்லா கிளினிக், பஸ்சிம் விஹார் பாலி கிளினிக் ஆகியவற்றை  பார்வையிட்டனர். அவர்களுடன் டெல்லி முதல்வர் கேஜரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பான்-கீ- மூன் கூறுகையில், "டெல்லியில் வசிக்கும் நலிந்த, ஏழை மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதியை அளிக்கு மொஹல்லா கிளினிக் திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. மொஹல்லா கிளினிக்கும், பாலி கிளினிக்கும் சுகாதாரத் திட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இத் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து அதிக ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்குமென நம்புகிறேன்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து