செல்பி எடுக்க உதவியாளரை நியமித்த டி.வி. தொகுப்பாளினி

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
TV As hostess 08-09-2018

வாஷிங்டன், அமெரிக்க டி.வி. தொகுப்பாளினியான கிம் கர்தாஷியனை செல்பி எடுக்கக் கூடாது என மருத்துவர்கள் கண்டிப்பாக கூறி விட்டதால் செல்பி எடுக்க பெண் உதவியாளரை நியமனம் செய்தார்.அமெரிக்க டி.வி. சேனலின் தொகுப்பாளினியும், தொழில் முனைவோருமான கிம் கர்தாஷியனுக்கு செல்பி என்றால் மிகவும் பிடித்தம். தன்னை விதவிதமாக அலங்காரம் செய்து செல்பி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் அனுப்பி வருவார்.

ஓய்வில்லாமல் செல்பி எடுத்ததால் இவருக்கு மணிக்கட்டில் பிரச்சினை ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்ற போது கைகளுக்கு நிச்சயம் ஓய்வளிக்க வேண்டும் என்று கிம்மை கட்டி போட்டு விட்டனர்.இதனால் யோசனை செய்த கிம் கர்தாஷியன் செல்பி எடுப்பதற்காகவே ஒரு பெண்ணை சம்பளத்துக்கு நியமனம் செய்துள்ளார்.  தானே எடுத்தாதான் செல்பி. அடுத்தவர் எடுத்தால் அது எப்படி செல்பியாகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து