2014 பார்லி. தேர்தலை காட்டிலும் அதிக இடங்களை பெறுவோம்: பா.ஜ.க.

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      இந்தியா
Amit Shah 2017 07 01

புது டெல்லி,2014 தேர்தலில் பெற்ற வெற்றியை விட வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. சூளுரைத்துள்ளது.பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் நேற்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் அமித்ஷா விழாவைத் தொடங்கி வைத்துள்ளார்.  நிகழ்ச்சியில் அஜேய் பி.ஜே.பி. என்று முழக்கமிடப்பட்டுள்ளது. சந்திப்பில் கலந்து கொண்ட தேசியமட்டத் தலைவர்களும், மாநில பா.ஜ.க தலைவர்களும் இவ்வாறு முழக்கமிட்டனர்.

பாஜகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 2014-ல் தனிப் பெரும்பான்மையுடன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதைக்காட்டிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தற்போது உறுதி பூண்டுள்ளனர். நிகழ்ச்சியில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றியைப் பெறும் வகையில் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் தற்போது அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் பா.ஜ.க. அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது. விழா முடிவில் இன்று பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து