அமெரிக்க ஓபன் ஒற்றையர் இறுதிப் போட்டி: மார்ட்டின் டெல்போட்ரோவை எதிர்கொள்கிறார் ஜோகோவிச்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      விளையாட்டு
DJokovic enter final 2018 9 8

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸின் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை வீழ்த்தி செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அவர் மார்ட்டின் டெல்போட்ரோவை எதிர்கொள்கிறார்.

இறுதிப் போட்டிக்கு...

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரியை சந்தித்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஜோகோவிச் கை ஓங்கியிருந்தது. அது போலவே 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தி செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

நடால் விலகல்...

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் 2009-ஆம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை ரபெல் நடால் எதிர்கொண்டார். இந்நிலையில் அரையிறுதி போட்டியில் விளையாடி கொண்டிருக்கையில் திடீரென முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ரபெல் நடால் அரையிறுதியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து நடாலை எதிர்த்து விளையாடிய டெல்போட்ரோ இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் வரும் 10-ம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை சந்திக்க இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து