முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து அணி

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

கடும் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பேட்டிங் தேர்வு...

இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரியும் சேர்க்கப் பட்டனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் அவர் களத்திற்குள் நுழைந்ததும், இந்திய வீரர்கள் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். கேப்டன் கோலி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக குக் ஆடும் 30-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் இந்தியா வுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

விராட் கோலி...

குக்கும், ஜென்னிங்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் எடுத்தது. 23 ரன்கள் எடுத்த நிலையில் ஜென்னிங்ஸ், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, குக், மொயி ன் அலி ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி இருக்க வேண்டியது. குக், 37 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை, ஸ்லிப்பில் நின்ற ரஹானே தவற விட்டார். மொயீன் அலி 2 ரன்னில் கொடுத்த கேட்ச்சை, கேப்டன் விராத் கோலி கோட்டை விட்டார்.

பும்ரா வீழ்த்தினார்...

இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இவர்கள் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் எடுக்க முடியவில்லை.  சிறப்பாக விளையாடி வந்த குக், 71 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். குக் அவுட் ஆன அதே ஓவரில் கேப்டன் ரூட் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். ரூட், டக்-அவுட் ஆன வேகத்தில் பேர்ஸ்டோவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 மூன்று விக்கெட்களை இழந்தது.

50 ரன்கள் எடுத்து...

இதனையடுத்து, மொயின் அலி, ஸ்டோக்ஸ் ஜோடி சற்று நேரம் நிலைத்து நின்றது. ஸ்டோக்ஸ் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அவரை தொடர்ந்து சாம் கர்ரன் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் டக் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 50 ரன் எடுத்த நிலையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 170 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இருந்தார்.

இஷாந்த் சர்மா...

இங்கிலாந்து அணி முதல் நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 11 ரன்னுடனும் ரஷித் 4 ரன்னுடமும் களத்தில் உள்ளனர். இன்று, இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது  இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்கள் சாய்த்தார். பும்ரா, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி 130 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. 250 ரன்களுக்கு மேல் முதல் நாளில் அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து