நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பரிதாப பலி

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      உலகம்
helicopter crash in Nepal 09-09-2018

காத்மாண்டு,நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:-நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, மூத்த விமானி நிஸ்ஷல், ஜப்பானிய மலையேற்ற வீரர் ஹிரோமி கோமட்சு உள்ளிட்ட ஏழு பேருடன் புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென காலை முதல் மாயமானது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த ஹெலிகாப்டர் நுவாகோட் மாவட்டம் தாடிங் எல்லை காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மீட்பு குழுவினர் துரித கதியில் அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மிகுந்த சிரமத்துக்குப் பிறகு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர்.

விபத்து நடந்த பகுதியிலிருந்து ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில், விமானி நிஸ்ஷல், ஜப்பானிய மலையேற்ற வீரர் கோமட்சு உடல்களும் அடங்கும். ஆனால், வானிலை காரணமாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தீப்பிடிக்காததால் அதிருஷ்டவசமாக விபத்து நடந்த பகுதியிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு உடலில் காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளன என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து