தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      உலகம்
united nations 09-09-2018

நியூயார்க், தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித் துள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அந்தப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஐ.நா.வின் தபால் தலை நிர்வாகப் பிரிவு, தீபாவளி பண்டிகைக்காக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது. நியூயார்க்கில் அக்டோபர் 19 -ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரே தாளில் 10 சிறப்பு தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். அந்தச் சிறப்பு தபால் தலையில் அகல்விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும். அதன் பின்னணியில் ஐ.நா. தலைமை அலுவலக கட்டிடமும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்தும் இடம்பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக சிறப்பு தபால் தலை வெளியிடுவதை ஐ.நா.வுக்கு இந்தியாவின் நிரந்தரப் பிரதி நிதி தூதர் சயத் அக்பருதீன் வரவேற்றுள்ளார். தீபாவளிக்கு ஐ.நா.வின் அருமையான பரிசு இது என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து