எம்.ஜி.ஆர். பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மலேசிய முன்னாள் துணை பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      உலகம்
Malaysian former deputy prime minister 09-09-2018

மலேசியா,மலேசியாவில் தற்போது செரி செடியா என்ற இடத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பகதான் ஹர்பான் என்ற கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்  தேசாமந்திரி என்ற பகுதியில், எம்.ஜி.ஆர். வேடமிட்ட ஒருவர், எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டால் பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அன்வர் இப்ராஹிம் தன்னை மறந்து திடீரென அவரும் டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார். இத்தனைக்கும் இவர் அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் ஆவார். இதைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து