சீனாவில் விளையாடப்படும் தமிழக பாரம்பரிய விளையாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      உலகம்
Indian traditional game in china 09-09-218

பெய்ஜிங்,தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கல்லாங்கா விளையாட்டு தற்போது சீனாவில் பிரபலமாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று கல்லாங்காய். இது பெண்கள் விளையாடும் விளையாட்டாகும். இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டு மானாலும் விளையாடலாம். இது பொதுவாக ஜல்லிக் கற்களால் விளையாடப்படுகின்றன.

ஒரு கல்லை மேலே எறிந்து அது கீழே விழுவதற்குள், கீழே இருக்கும் மற்ற கற்களை வாரி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே போகும் காய் தவறி கீழே விழுந்தால், அவுட் ஆகி விட்டதாக பொருள். இந்தக் கல்லாங்காயை ஐந்து அல்லது ஏழு கற்களைக் கொண்டும் விளையாடலாம். இப்படிப்பட்ட விளையாட்டுகள் தற்போது கிராமப்புறங்களில் எங்காவது விளையாடப்படலாம். 

ஆனால் சீனாவிலோ இந்த கல்லாங்காய் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. நம் நாட்டு குழந்தைகள் சீன மொபைல்களில் விளையாடி சோம்பேறியாவதும், அந்நாட்டினர் கல்லாங்காய் விளையாடி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்க்கும் போது என்னத்த சொல்வது என்றே தெரியவில்லை.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து