முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் உ.பி. பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாஹாரெய்ச்,நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோவில் அனைத்தும் எங்களுடையதுதான் என்று உ.பி. மாநில பா.ஜ.க. அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா ராமர் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பஹாரெய்ச் நகரில் அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தியில் அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். சுப்ரீம் கோர்ட்டே எங்களுடையதுதான். ஆதலால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம். நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவரது இந்த பேட்டி பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவர்  உடனடியாக தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து மீண்டும் பேட்டி அளித்தார், அதில், நான் சுப்ரீம் கோர்ட் நம்முடையது என்று கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த நாட்டின் குடிமக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன். நான் ஒருபோதும் நீதிமன்றம் எங்களுடைய அரசாங்கத்துக்குச் சார்பானது என்று தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து