காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பங்கேற்போம் தேசிய மாநாட்டு கட்சி பரூக் அப்துல்லா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      இந்தியா
Farooq Abdullah 09-09-2018

ஜம்மு,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பங்கேற்போம் என்று தேசிய மாநாட்டு கட்சி கூறியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:-
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பலவீனமாக்குவதுதான் மத்திய அரசின் திட்டம் என்றால், எங்கள் வழி தனியாக இருக்கும். தேர்தலில் எங்களால் பங்கேற்க முடியாது. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்லா மல் சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலையும் பறக்கணிப்போம். தேர்தலில் இருந்து விலக விரும்பவில்லை.

ஆனால், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தலில் பங்கேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து