தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      தமிழகம்
Chennai Weather Center 1 06-09-2018

சென்னை,வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் 5 செ.மீம், அரியலூரில் 3 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து