இங்கிலாந்தில் தடுமாறும் இந்திய அணி செயல்பாடுகள் குறித்து ஆய்வு - பி.சி.சி.ஐ. தலைவர் வினோத்ராய் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2018      விளையாட்டு
Vinod Rai 2018 9 9

புது டெல்லி : இங்கிலாந்தில் தடுமாறி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் குறித்து பி.சி.சி.ஐ. ஆய்வு நடத்தும் என்று நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்  தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தோல்விகளை சந்தித்திருந்தாலும் பந்துவீச்சில் ஒரு சில நேரங்களில் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது. இருப்பினும், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், டெயிலண்டர்களை வீழ்த்துவதில் சற்று பின்னடைவையே சந்தித்துள்ளது. இந்திய அணியின் இந்த செயல்பாடுகள் விமரிசனத்துக்குள்ளானது.

இந்நிலையில், அணி மேலாளர் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ.யின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துடன் தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி திணறல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து