2019-ல் ஓய்வு பெறுகிறார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      உலகம்
Alibaba founder Jack Ma 10-09-2018

பெய்ஜிங்,சீனாவின் மிகப்பெரிய பணக்காரரான ஜாக் மா, அலிபாபா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கு பதில் 2019-ம் ஆண்டு அவர் ஓய்வு பெறுகிறார்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா, சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துள்ளது. ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். 54 வயதாகும் ஜாக் மா அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல் வெளியானது. ஜாக் மாவிடம் பேட்டி கண்ட, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, நேற்று ஓய்வு பெறுவதாக தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில், தனது ஓய்வு தொடர்பாக ஜாக் மா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி அன்று தான் ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.அலிபாபா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியான, 46 வயதாகும் டேனியல் ஷாங்கிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும், அதேசமயம் இயக்குநர்களில் ஒருவராக தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனி கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான தன்னார்வப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து