முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள வெள்ள மீட்புப் பணியின் போது முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவருக்குக் கிடைத்த கார் பரிசு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு படகில் ஏற்றும் போது கீழே படுத்து முதுகை படிகட்டாக மாற்றிய மீனவருக்கு கார் ஒன்றை பரிசளித்து, கார் நிறுவனம் கௌரவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேரள மீனவர்கள் ஏராளமானோர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்ஷாலும் (32) ஒருவர்.
முப்படை வீரர்களுக்கு இணையாக மீனவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியின் போது, மலப்புரம் பகுதியில் சிக்கிக் கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்புப் படகில் ஏற்ற முயன்ற போது, படகின் உயரம் காரணமாக பெண்களால் ஏற முடியாமல் அவதிப்பட்டனர்.

அப்போது சற்றும் யோசிக்காமல், முட்டி அளவுக்கு தேங்கியிருந்த தண்ணீரில் குனிந்து தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்கள் படகில் ஏற உதவினார் ஜெய்ஷால். இந்த காட்சி சமூக ஊடகங்களில் அப்போது வைரலாகப் பரவியது.

இந்த நிலையில், அவரது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணியை அங்கீகரிக்கும் வகையில், மகிந்ரா நிறுவனத்தின் கார் டீலர், புதிய மாடல் காரான மாரஸோவை ஜெய்ஷாலுக்கு பரிசளித்து மகிழ்ந்துள்ளது.

சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலரும் பாராட்டியிருந்தனர். மேலும், வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்பையும் மீனவர்கள் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து