பலாத்காரம் செய்ய முயன்றதாக மைசூர் சாமியார் மீது பெண் புகார்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Complain about samy 10-09-2018

மைசூர்,மைசூரைச் சேர்ந்த ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தன்னை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 41 வயது பெண் புகார் கொடுத்துள்ளார்.

சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் தங்கியுள்ள ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமியின் விரதம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. தினசரி அங்கு தனது பக்தர்களை சந்தித்து வரும் அவர், நிதி பிரச்சினை, குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவர் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் சாமியார் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார் ஒரு பெண். ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் அந்த பெண்

தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கும் எனது கணவருக்கும் இடையே திருமணமாகி 15 வருடமாகிறது. எனது கணவர் இந்த சாமியாரின் பக்தர் ஆவார். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை சாமி தீர்த்து வைப்பார். நீ போய்ப் பார் என்று கூறி வந்தார். ஆனால் நான் பார்க்க போக மாட்டேன் என்று கூறி விட்டேன்.

இந்த நிலையில் கடந்த  4- ம் தேதி அதிகாலை ஒரு மணி இருக்கும். கணவர் வீட்டில் இல்லை. அப்போது காலிங் பெல் ஒலித்தது. கணவர்தான் வந்து விட்டாரோ என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்தார். அவருடன் ஐந்து பேரும், கூடவே எனது கணவரும் நின்றிருந்தனர். வேகமாக வீட்டுக்குள் புகுந்த சாமியார் என்னைத் தள்ளி விட்டு சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். கோவிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.

பிறகு என்னை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். எனது உடையை தூக்கிப் போட்டு தீவைத்துக் கொளுத்தினார். என்னை கொல்லவும் முயற்சித்தார்.  பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர் ஒரு வாகனத்தில் கட்டாயப்படுத்தி என்னை ஏற்றி  அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறினார். இவ்வாறு அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணின் கணவரை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். சாமியார் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மைசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து