முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதைப் பற்றியும் பேச மறுக்கிறார் மோடி டெல்லியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது, விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கிறது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறது, ஆனால், பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசு மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று  நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-சாமானிய மக்களின் பிரச்சினைகளை பற்றியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடி பேசவில்லை. இது எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போது, மோடி அமைதியாக இருக்கிறார். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இதுபோல் வீழ்ச்சி அடைந்தது இல்லை. விவசாயிகள் தற்கொலை அதிகரித்து விட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலாத்காரக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எதற்கும் பிரதமர் மோடி வாய்திறந்து ஒருவார்த்தைகூடப் பேச மறுக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ரபேல் போர் விமானம் குறித்து கேள்வி எழுப்பினால் கூட மோடி பதில் அளிப்பதில்லை. நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் சோர்வடைந்து இருக்கும் போது, மக்களிடம் உற்சாகமாக உரையாற்றுகிறார் மோடி.

காங்கிரஸ் அரசு கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் 4 ஆண்டுகளில் செய்துவிட்டோம் என்று பேசுகிறார். 70 ஆண்டுகளாக எதைச் செய்யக் கூடாது எனத் தவிர்த்தோமோ,  அதை எல்லாம் நீங்கள் 4 ஆண்டுகளில் மக்களுக்குச் செய்து விட்டீர்கள். 15 முதல் 20 மிகப்பெரிய தொழில் அதிபர்கள்தான் நாட்டின் அனைத்துச் சலுகைகளையும் அனுபவித்து வருகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து