இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் 5000 போலீஸார் பாதுகாப்பு பணி.

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
10 emanuvel news

     பரமக்குடி - :பரமக்குடியில்  இமானுவேல் சேகரனின் 61 வது நினைவுதினம் அனுஷ்டிக்கப் படுவதையொட்டி ஆளில்லா உளவு விமானம் மற்றும் 75 சிசிடிவி கேமரா மூலம்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், சிறப்பு அதிரடி காவல் துறையினர் உள்பட 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரமக்குடியில் தேவேந்திரர் சமுதாயத்தைச் சேர்ந்த இமானுவேல் சேகரனின் 61 வது நினைவுதினம் இன்று (11 ம்தேதி) அனுஷ்டிக்கப் படுகிறது. இதையடுத்து நகரில் சந்தைப்பேட்டை பகுதி போர்டிங் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமுதாய மக்கள், சமுதாயத் தலைவர்கள், அனைத்து அரசியல் கட்சியினர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.மேலும்  பரமக்குடி நகரில் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளதுடன், பரமக்குடி தாலுகா கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வந்து செல்வதற்கும் , சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வந்து செல்வது உள்பட பல்வேறு  முடிவுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப் 9 ம்தேதி முதல் 15 ம்தேதி வரை 144 தடை உத்தரவு அமுல் படுத்தப் பட்டு வாகனங்கள் அனைத்தும் முழுமையாக கண்காணிக்கப் படுகிறது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது :-
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 61 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. மாவட்டத்தில் அன்றைய தினம் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.மேலும் நினைவிடம் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் மோப்ப நாய்கள் மூலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் , காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் தலைமையில்  4 காவல்துறை துணைத் தலைவர்கள் , 17 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்  , 28 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் சென்னை, நெல்லை, கோவை, தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, திண்டுக்கல்  உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  5 ஆயிரம் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் காவல்துறையின் சார்பில் இயக்கப்படும் ஆளில்லா உளவு  விமானம் மூலம் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்து செல்பவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் வாகனங்களை சுமார் 5 கி.மீட்டர் சுற்றளவில்  கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் நினைவிடம், ஐந்துமுனை சந்திப்பு, சந்தைப் பேட்டை சந்திப்பு மற்றும் பரமக்குடி முழுவதும் 75 சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து காவல் துறையினர் முழுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து