போடி அருகே அ.இ.அ.தி.மு.க சார்பில் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை ஓ.ப.ரவீந்திரநாத்குமார் துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      தேனி
10 ravi news

போடி- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், மார்க்கையன் கோட்டையில் அ.இ.அ.தி.மு.க பேரூர் கழகத்தின் சார்பில் மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்லைப்பந்தயத்தை தேனி மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், ரொக்கப்பரிசுகளையும் வழங்கினார்.
 சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மார்க்கையன் கோட்டை பேரூர் கழகத்தின் சார்பில் இரட்டை மாட்டுவண்டி எல்லைப்பந்தயம் நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆசியோடு, தேனி மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் தலைமையிலும், தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், எல்லப்பட்டி முருகன், பேரூர் கழக செயலாளர் அகிலன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
 இரட்டை மாட்டுவண்டி எல்லைப்பந்தயத்தில், பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், இளஞ்சிட்டு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசு, வெற்றி கோப்பைகள், கொடி பரிசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தேனி கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், நகர் கழக செயலாளர்கள் சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீசன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் பாஸ்கரன், மாநில ரேக்ளா சங்க பொறுப்பாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், கழக பிரமுகர்கள், ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து