பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. - காங்கிரஸ் மோதல் கராத்தே தியாகராஜன் பேச்சால் தி.மு.க.வினர் ஆத்திரம்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      தமிழகம்
Karat Thiyagarajan 10-09-2018

சென்னை,சென்னையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேச்சால் தி.மு.க. - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகள் பாரத் பந்த் அறிவித்தன. இந்த பந்த் போராட்டத்திற்கு கட்சியினரை தயார்படுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். பந்த்தை வெற்றிகரமாக காங்கிரசின் கூட்டணிக் கட்சியான தி.மு.க, பா.ம.க இடது சாரிகள் உறுதியெடுத்தன. சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கடைகளை மூடக்கோரி காங்கிரசார் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை தவிர ஒரு பாதிப்பையும், இந்த பந்த் ஏற்படுத்தவில்லை.

திடீர் போராட்டம்...தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. ரயில்களும் வழக்கம் போல் ஓடின. மாநகரின் எல்லா பகுதியிலும் கடைகள் அலுவலகங்கள் திறந்திருந்தன. கோயம்பேடு வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டு பரபரப்பாக இயங்கின. இந்த நிலை தான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இருந்தது.

இதற்கிடையே சென்னையின் சகஜநிலையை தடுக்கும் வகையில் திமுக - காங்கிரஸ் மற்றும் இடது சாரிகட்சிகளின் திடீர் மறியல் போராட்டங்களை நடத்தின. இந்த போராட்டத்தில் நடுரோட்டில் உட்கார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

தி.மு.க.வினர் ஆத்திரம்...இந்த நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பாரத்பந்த் என்ற வாசகத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் கண்டண ஆர்பாட்டம் நடை பெற்றது. இதில் பேசிய தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இதுபோன்ற கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தி.மு.க. சார்பில் தலைமைக்கழக நிர்வாகிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையோ, மாவட்ட செயலாளர்களையோ அனுப்பி இருக்க வேண்டாமா என்று கேட்டார். மேலும் தி.மு.க. எப்போது எந்த ஆர்பாட்டம் நடத்தினாலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநில தலைவரோ, சட்ட மன்ற உறுப்பினரோ கலந்து கொள்கிறார்கள் என்று கூறினார். கராத்தே தியாகராஜனின் இந்த பேச்சு தி.மு.க.வினரிடையே ஆத்திரத்தை கிளப்பியது. மேலும், கராத்தே தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தி.மு.க.வினர் கோரினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து