முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதம்:சாதனையுடன் விடைபெற்றார் குக்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஓவல்,சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலாஸ்டர் குக் தனது கடைசி இன்னிங்ஸில் 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் மற்றும் கடைசிப் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார் இங்கிலாந்து வீரர் அலெய்டர் குக்.

ஓய்வு அறிவிப்பு...இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸக்ஸில் அங்கம் வகித்த அலாஸ்டர் குக், கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் டெஸ்டிலேயே சதம் அடித்த குக், ஓய்வு பெறும் தனது கடைசி போட்டியிலும் சதம் அடித்து விடைபெற்றார்.  இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அலாஸ்டர் குக் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய குக் முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

5-வது வீரராக...இருப்பினும், அவர் இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 33-வது சதத்தை அடித்தார். இதற்கு முன்பு ரெக்கி டஃப், போன்ஸ்ஃபோர்ட், கிரேக் சேப்பல், அசாருதீன் ஆகியோர் தங்களுடைய முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதமடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் 5-வது வீரராக குக் இணைந்தார்.

விடைபெற்றார்...சதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குக் 147 ரன்கள் எடுத்திருந்த போது விஹாரி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த அலாஸ்டர் குக் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் மற்றும் சதம் அடித்து சிறப்பான ஆட்டத்துடன் விடைபெற்றார்.

அலாஸ்டர் குக்கின் சாதனை துளிகள்: 
- அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்.
- அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர்.
- கேப்டனாக அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர்.
- அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்.
குறைந்த வயதில் டெஸ்ட் ரன்கள் - இங்கிலாந்து வீரர்கள்
2000 டெஸ்ட் ரன்கள் - குக்.
3000 டெஸ்ட் ரன்கள் - குக்.
4000 டெஸ்ட் ரன்கள் - குக்.
5000 டெஸ்ட் ரன்கள் - குக்.
6000 டெஸ்ட் ரன்கள் - குக்.

குறைந்த வயதில் டெஸ்ட் ரன்கள் (அனைத்து நாடுகளையும் சேர்த்து)
6000 டெஸ்ட் ரன்கள் - குக்.
7000 டெஸ்ட் ரன்கள் - குக்.
8000 டெஸ்ட் ரன்கள் - குக்.
9000 டெஸ்ட் ரன்கள் - குக்.
10000 டெஸ்ட் ரன்கள் - குக்.
11000 டெஸ்ட் ரன்கள் - குக்.
12000 டெஸ்ட் ரன்கள் - குக்.
அதிக டெஸ்டுகள்: இங்கிலாந்து
குக் - 161 டெஸ்டுகள்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 142 டெஸ்டுகள்.
அலெக் ஸ்டீவர்ட் - 133.
ஸ்டுவர்ட் பிராட் - 122.
இயன் பெல், கிரஹாம் கூச் - 118.
அதிக டெஸ்ட் ரன்கள்: இங்கிலாந்து
12, 472 ரன்கள் - அலாஸ்டர் குக்.
8,900 ரன்கள் - கிரஹாம் கூச்.
8,463 ரன்கள் - அலெக் ஸ்டீவர்ட்.
8,231 - டேவிட் கோவர்.
8,181 - கெவின் பீட்டர்சன்.

தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகள் விளையாடிய வீரர்கள்
158 டெஸ்டுகள் - குக்.
153 டெஸ்டுகள் - ஆலன் பார்டர்.
107 டெஸ்டுகள் - மார்க் வாஹ்.
106 டெஸ்டுகள் - சுனில் கவாஸ்கர்.
101 டெஸ்டுகள் - மெக்கல்லம்.
குக்கின் சமீபத்திய டெஸ்ட் ஆட்டத்திறன் - 2015 முதல்...
2015: பேட்டிங் சராசரி - 60.42, 100: 2, அரை சதங்கள்: 4.
2016: பேட்டிங் சராசரி - 31.75,100: 1 அரை சதங்கள்: 3.
2017: பேட்டிங் சராசரி - 54.50, 100: 1 அரை சதம்: 0.
2018: பேட்டிங் சராசரி - 12.00, 100: 0 அரை சதம்: 0.
அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள்
குக் - 11,845 ரன்கள்.
கவாஸ்கர் - 9,607 ரன்கள்.
ஸ்மித் - 9,030.
ஹேடன் - 8,625 ரன்கள்.
சேவாக் - 8,207 ரன்கள்.
டெஸ்டில், ஒரு இன்னிங்ஸில் 800 நிமிடங்களுக்கு மேலாக விளையாடிய வீரர்கள
ஹனிஃப் முஹமது - 970 நிமிடங்கள்
கேரி கிரிஸ்டன் - 878 நிமிடங்கள்
குக் - 836 நிமிடங்கள் (2015-ல், பாகிஸ்தானுக்கு எதிராக 263 ரன்கள் எடுத்தார்.)
1000 டெஸ்ட் ரன்கள் எடுத்து குறைவான சிக்ஸர் அடித்த வீரர்கள்
குக் - 11 சிக்ஸர்.
கவாஸ்கர் - 26 சிக்ஸர்.
ஆலன் பார்டர் - 28 சிக்ஸர்.
குக்: 160 டெஸ்டுகள்
* தன் டெஸ்ட் வாழ்வில் ஒரே ஒருமுறைதான் அவர் விலகியுள்ளார். 2006-ல் மும்பை டெஸ்ட் போட்டியில் வயிற்றுப் பிரச்னை தொடர்பாக விலகினார். அதன்பிறகு தொடர்ச்சியாக 158 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
* இதுவரை 26,086 பந்துகளை அவர் எதிர்கொண்டுள்ளார். பந்துவீச்சாளராக 18 பந்துகளை வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அந்த விக்கெட் - இஷாந்த் சர்மா.
* ஒரு விக்கெட் எடுக்க நூறு டெஸ்டுகள் விளையாடிய ஒரே வீரர் குக். இஷாந்த் சர்மாவின் விக்கெட்டை அவர் தனது 105-வது டெஸ்டில் எடுத்தார். மெக்கல்லம் 85-வது டெஸ்டிலும் மார்க் பவுச்சர் 84-வது டெஸ்டிலும் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
* இது விநோதமான புள்ளிவிவரம். ஜெயசூர்யாவும் முரளிதரனும் ஒன்றாக இணைந்து 90 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள். ஆனால் களத்தில் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்ததில்லை. அதேபோல குக்கும் பிராடும் 86 டெஸ்டுகள் வரை ஒன்றாக விளையாடியும் பேட்டிங்கில் கூட்டணி அமைத்ததேயில்லை. அதற்குப் பிறகு இருவரும் ஒன்றாக விளையாடிய 122 டெஸ்டுகளில் இருமுறை இணைந்து பேட்டிங் செய்துள்ளார்கள்.
* இது ஓர் அட்டகாசமான புள்ளிவிவரம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 646 கூட்டணிகளை அமைத்துள்ளார் குக். அதில் அவர் ரன் அவுட் ஆவதை ஒரே ஒரு பேட்ஸ்மேன்தான் பார்த்துள்ளார். குக் தொடர்புடைய பேட்டிங் கூட்டணிகளில் அவர் ஒருமுறை மட்டுமே ரன் அவுட் ஆகியுள்ளார். அவருடைய ஜோடிகள் 6 முறை ரன் அவுட் ஆகியுள்ளார்கள்.

டெஸ்டில் அதிகமுறை குக் விக்கெட்டை வீழ்த்தியவர்கள்
மார்னே மார்கல் - 12 முறை.
இஷாந்த் சர்மா - 11 முறை.

ஒவ்வொரு நாடுகளிலும் குக்கின் டெஸ்ட் சராசரி
ஆஸ்திரேலியா - 48.94 ரன்கள்.
வங்கதேசம் - 61.57 ரன்கள்.
இங்கிலாந்து - 43.49 ரன்கள்.
இந்தியா - 51.45 ரன்கள்.
நியூஸிலாந்து - 27.13 ரன்கள்.
தென் ஆப்பிரிக்கா - 31.40 ரன்கள்.
இலங்கை - 48.33 ரன்கள்.
யூ.ஏ.இ. - 55.36 ரன்கள்.
மே.இ. - 54.33 ரன்கள்.

ஆசியாவில் அதிக பேட்டிங் சராசரி எடுத்த ஆசியர் அல்லாத தொடக்க வீரர்கள்
குக் - 53.13 சராசரி ரன்கள்
மேத்யூ ஹேடன் - 50.39 ரன்கள்.
க்ரீம் ஸ்மித் - 50.14 சராசரி ரன்கள்.
அதிக டெஸ்ட் ரன்கள்:
சச்சின் டெண்டுல்கர் - 15,921.
ரிக்கி பாண்டிங் - 13,378.
ஜேக் காலிஸ் - 13,289.
ராகுல் டிராவிட் - 13,288.
அலாஸ்டர் குக் - 12,472 .

அதிக ரன்கள் எடுத்த இடக்கை பேட்ஸ்மேன்கள்:
அலாஸ்டர் குக் - 12,472.
குமார் சங்கக்காரா - 12,400.
பிரையன் லாரா - 11,953.
ஷிவ்நரைன் சந்தர்பால் - 11,867.

ஓய்வு சமயத்தில், கடைசி டெஸ்ட் விளையாடியபோது இருந்த வயது
1. கூச் - 41 வயது 6 மாதங்கள்.
2. சந்தர்பால் - 40 வயது 8 மாதங்கள்.
3. சச்சின் - 40 வயது 6 மாதங்கள்.
19. குக் - 33 வயது 8 மாதங்கள்
20. க்ரீம் ஸ்மித் - 33 வயது 1 மாதம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து