ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      உலகம்
america(N)

வாஷிங்டன்,சிரியா அரசு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

7 லட்சம் மக்கள்...சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன. ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தாக்குதல் நடக்கும் பட்சத்தில் இந்நகரில் தற்போது வசிக்கும் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிப்பை சந்திப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

ரசாயன தாக்குதல்...இந்நிலையில், இத்லிப் நகரில் பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியா அரசு ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளதாவது சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், இத்லிப் நகரில் ரசாயன தாக்குதல் நடத்த சிரியா திட்டமிட்டுள்ளது. அவ்வாறு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டுப்படைகள் இணைந்து கடுமையான பதில் தாக்குதல் தொடுக்கும். இதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் ஒப்புதல் வழங்கிவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து