முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு வழக்கு எத்தனை நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் லக்னோ நீதிமன்றத்திடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை குறித்த காலக்கெடுவிற்குள் எப்படி முடிக்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்? என லக்னோ சிறப்பு நீதிமன்றத்திடம் சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, ஜோஷி மற்றும் 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டனர். அதுவரை விசாரணை நீதிபதியை மாற்றக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிபதி யாதவ் மனு:இதன்படி தினசரி இந்த வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாபர் மசூதி வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை முடியும் வரை நீதிபதி யாதவின் பதவி உயர்வை அலகாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நீதிபதி யாதவ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்குகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எஸ்.கே.யாதவின் மனுவிற்கு உத்தரப் பிரதேச அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறதா என்பதை அறிய விரும்புகிறோம். எத்தனை நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் என்பது பற்றி விசாரணை நீதிபதி சீலிட்ட கவரில் முழு அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து