முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

விநாயகர் சதூர்த்திக்காக பொது இடங்களை ஆக்கிரமித்து சிலைகள் வைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெறாமலும் பல இடங்களில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்தும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
சட்டவிரோதமாகாது

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது கொடுத்த விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விநாயகர் சிலைகள் வைப்பதில் தவறேதும் இல்லை என தெரிவித்தனர். மின்சாரத்தை திருட்டு தனமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தி பொது கூட்டங்கள் நடத்தி வருவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு வகுத்த விதிகள் படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது சட்ட விரோதம் ஆகாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து