தனியாமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை எம்.எல்.ஏ பெரியபுள்ளான் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      மதுரை
11 vadippati news

மேலூர்  -மதுரைமாவட்டம் மேலூர் அருகே உள்ள  தனியாமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை   கட்டிடத்தை புறநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும்,  மேலூர் சட்ட மன்றஉறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும்,   மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ கே. தமிழரசன், ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.  இந்த கட்டிடத்தில்  1 டாக்டர் 3 நர்சுகள்  பணியில் இருப்பார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை  துணை இயக்குநர்  சுகாதார பணிகள்  அர்ஜுன், மேலூர் ஒன்றிய கழக செயலாளர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர் வெற்றிச்செழியன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் செயலாளர் அன்புச்செல்வம்,  வள்ளலாப்பட்டி பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சரவணக்குமார், பரமசிவம், இப்ராகீம், சக்கரவர்த்தி,  கூட்டுறவு சங்கதலைவர்கள் தனியாமங்கலம் பூபதி,  அக்ரோ கயஸ்முகமது,  சென்னகரம்பட்டி மலைச்சாமி, வெள்ளலூர் இளங்கண்ணன், முன்னாள் கூட்டுறவு சங்கதலைவர்கள் கீழையூர் வேலு, கொட்டகுடி சுப்பையா, கல்லம்பட்டி மீராஉசேன், மேலூர் முன்னாள் ஒன்றியகவுன்சிலர் கண்ணன்,   வெள்ளலூர் வட்டார மருத்துவ அலுவலர்  அம்பல சிவனேஷ், டாக்டர் ரதி, சமுதாய நலசெவிலியர் கலைவாணி,  தனியாமங்கலம் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து