பெரியகுளம் அருகே அரசு பள்ளிக்கு சீர் கொடுத்த ஊர் பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      தேனி
11 periyakulam news

 தேனி செப் 12 பெரியகுளம் அருகே ஆரோக்கியமாதா நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்வி மேலாண்மை குழு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான பொருட்களை ஊர் பொதுமக்கள் வழங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது நேற்று ஊர் பொதுமக்கள் தாங்கள் வழங்கும் சீர் பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற சீர் வழங்கும் விழாவிற்கு தலைமையாசிரியர் நல்லாசிரியர் தமயந்தி தலைமை தாங்கினார். ஊர் பொதுமக்கள் சார்பில் பிச்சைமணி முன்னிலை வகித்தார். பெரியகுளம் வட்டார கல்வி அலுவலர் சதீஸ், சம்பூர்ணப்ரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக வழங்க தலைமையாசிரியர் தமயந்தி பெற்றுக் கொண்டார். தலைமையாசிரியர் தமயந்தியும் சமீபத்தில் தனக்கு நல்லாசிரியர் விருதுக்காக கிடைத்த பரிசு தொகை பத்தாயிரத்தையும் பள்ளி வளர்ச்சிக்காக வழங்கினார். பள்ளி ஆசிரியர் ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து