முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் நினைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுத்து மாற்றத்தை கொண்டு வர முடியும் தூய்மை விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் நடராஜன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- துரை மாவட்டம், திருமலைநாயக்கர் மகாலில் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ந் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தூய்மை விழிப்புணர்வு முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன், துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
 உலக சுற்றுலா தினத்தையொட்டி திருமலைநாயக்கர் மகாலில் தூய்மைப்பணி நடைபெறவுள்ளது.  உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ந் தேதி மதுரை மாவட்டத்தில் உலக சுற்றுலா தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.  அதனடைப்படையில் துய்மைப்பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  01.01.2019 முதல் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.  பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவப்பருவத்தில் இருந்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாம் துவங்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் சுமார் 5.5 இலட்சம் மாணவர்கள் உள்ளனர்.  எனவே மாணவர்கள் நினைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுத்து நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.
 மதுரை மாவட்டத்தை தூய்மையான மற்றும் பசுமையான மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அதற்காக தனிநபர் இல்லக்கழிப்பறை வசதியினை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்காக மகளிர் சுகாதார வளாகத்தினை பயன்பாட்டில் கொண்டு வரவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகத்தினை ஏற்படுத்தி கொடுத்து, தண்ணீர் வசதியினை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மாவட்டத்தை பொறுத்த வரை கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம், நிதி மேலாண்மை, திறன் மேம்பாடு போன்ற துறைகளின் வளர்ச்சியை பொறுத்தே இந்திய அளவில் முதன்மை மாவட்டமாக முன்னேற முடியும்.  எனவே மாணவர்கள் அனைவரும் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  மேலும் இது போன்ற விழிப்புணர்வு தூய்மைபணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தன்னார்வலர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி)  ,கே.எம்.பிரவீன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.நவநீதகிருஷ்ணன்  , துணை ஆட்சியர் (பயிற்சி)  .கோட்டக்குமார்  , மாவட்ட சுற்றுலா அலுவலர்  .பாலமுருகன்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து