முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அருகே சுருளி அருவியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சாரல் விழா.23ந் தேதி தொடங்குகிறது.

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      தேனி
Image Unavailable

கம்பம், - தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சாரல் விழா வருகிற 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தென் மாவட்ட மக்களின் சின்ன குற்றாலமாகவும் ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் இயற்கை வள மிக்க இடமாகவும் விளங்குகிறது.இங்கு தேனி மாவட்டம் மட்டுமில்லமால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,சென்னை,திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து அருவியில் தினமும் குளித்து விட்டு பிரசித்தி பெற்ற ஆதி அண்ணாமலையார் கோவில்,பூத நாரயணன் கோவிலில் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.சுருளி அருவியில் ஆண்டு தோறும் சாரல் விழா நடத்தப்பட்டு வந்தது.மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் துறையும் இணைந்து சாரல் விழாவை நடத்தினர்.கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கடைசியாக சாரல் விழா நடத்தப்பட்டது.அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக சாரல் விழா நடத்தப்பட வில்லை.மீண்டும் சாரல் விழா நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாரல் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதன் படி இந்த ஆண்டு சாரல் விழா வருகிற 23ந் தேதி தொடங்கி ஞாயிறு,திங்கள் என இரு நாட்கள் நடக்கிறது.இதற்கா முன்னேற்பாடு பணிகளை சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் துறையும் மேற் கொண்டு வருகிறது.விழாவில் காய்கறி சிற்ப கண்காட்சி மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.தற்போது அருவியில் ஆர்ப்பரித்து கொட்டி வரும் தண்ணீரால் சீசன் சிறப்பாக உள்ளதால் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.சாரல் விழாவில் அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து