முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னை நெருக்கடியில் இருந்து விடுவித்தற்காக பும்ராவுக்கு நன்றி - இங்கிலாந்து பேட்ஸ்மேன் குக்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : தன்னை நெருக்கடியில் இருந்து விடுவித்தற்காக பும்ராவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் குக் தெரிவித்துள்ளார்.

கடைசி போட்டியில்...

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியோடு ஒய்வு பெற இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், துவக்க ஆட்டக்காரருமான குக் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அறிமுகம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது வீரர் மற்றும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற அரிய சாதனையை குக் படைத்து இருக்கிறார்.

அறிமுக போட்டியில்...

2006-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் குக் (ஆட்டம் இழக்காமல் 104 ரன்கள்) சதம் அடித்து இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது கடைசி டெஸ்டில் சதம் அடித்த 40-வது வீரர், இங்கிலாந்து அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள குக் இடைவிடாது தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் (150 டெஸ்ட்) பங்கேற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

பும்ராவுக்கு நன்றி

இந்த அரிய சாதனையை நிகழ்த்திய குக், போட்டிக்கு பிறகு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தன்னை நெருக்கடியில் இருந்து விடுவித்தற்காக பும்ராவுக்கு நன்றி சொல்வதாக கலகலப்பாக பேசினார். தனது பேட்டியின் போது குக் கூறியதாவது:- “ 97 ரன்களில் இருந்த போது மேலும் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என நான் நினைத்து இருந்தேன்.   எனவே, பும்ராவின் ஓவர் த்ரோ என்னை தலைவலியில் இருந்து விடுவித்தது. பும்ரா இந்த தொடர் முழுவதும் எனக்கு தலைவலியாகவே இருந்தார். அவரை பொறுத்தவரை, எனக்கு சிறு வாய்ப்பை கொடுத்தார். எனவே, இதற்காக பும்ராவுக்கு நான் சில நொடிகள் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து