காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      இந்தியா
kashmir terrorist shot dead 2017 7 4

ஸ்ரீநகர்,ஜம்மு காஷ்மீரில் குப்வரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டை:ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வரா மாவட்டத்தின் ஹந்த்வரா அருகே உள்ள குலூரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பதில் தாக்குதல்:இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து