இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      விளையாட்டு
Rishapant 2018 9 11

ஓவல் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட் சில சாதனைகளைப் புரிந்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 5-ம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்தார். சர்வதேச அரங்கில் அவர் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும். மேலும் இதில் சில சாதனைகளையும் படைத்தார்.
ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:

• 118 - வி.மஞ்சுரேகர் v மே.இ.தீவுகள், 1959.
• 115* - அஜய் ராத்ரா v மே.இ.தீவுகள், 2002.
• 104 - ரித்திமான் சாஹா v மே.இ.தீவுகள், 2016.
• 100* - ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, 2018.
டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்ஸருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள்:
• கபில் தேவ் v மே.இ.தீவுகள், தில்லி, 1978/79.
• இர்ஃபான் பதான் v பாகிஸ்தான், பெங்களூரு, 2007/08.
• ஹர்பஜன் சிங் v நியூஸிலாந்து, அகமதாபாத், 2010/11.
• ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, ஓவல், 2018.
சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள்:
• 20 வயது 150 நாட்கள் - அஜய் ராத்ரா v மே.இ.தீவுகள், 2002.
• 20 வயது 342 நாட்கள் - ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, 2018.
• 21 வயது 188 நாட்கள் - வி.மஞ்சுரேகர் v மே.இ.தீவுகள், 1959.
4-வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
• 100* ரிஷப் பண்ட் v இங்கிலாந்து, ஓவல், 2018.
• 76* எம்.எஸ்.தோனி v இங்கிலாந்து, லார்ட்ஸ், 2007.
• 67* பார்திவ் படேல் v இங்கிலாந்து, மொஹாலி, 2016.
• 63 தீப் தாஸ் குப்தா v தென் ஆப்பிரிக்கா, போர்ட் எலிசபத், 2001.

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்தார்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து