சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவை நீக்கினால் இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும்: மெகபூபா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      இந்தியா
Mehbooba Mufti 2018 05 31

ஸ்ரீநகர் :  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார்.

கவர்னர் மாளிகை அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிதலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ.க. வாபஸ் பெற்றதை தொடந்து அம்மாநிலத்தில் கவர்னர்ஆட்சி நடைபெற்று வருகிறது.  அத்துடன் அரசியல் சட்டப் பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு சட்டப்பிரிவு 35 A நீக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.  தற்போது அக்டோபர் முதல் டிசம்பர் வரை  எட்டு கட்டங்களாக நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று கவர்னர் மாளிகை சமீபத்தில் அறிவித்தது.

முப்தி எச்சரிக்கை

ஆனால் சிறப்பு சட்டப்பிரிவு 35A விஷயத்தில் தெளிவான முடிவு அறிவிக்கப்படாதவரை, தேர்தல் நடைமுறைகளில் ஈடுபடப் போவதில்லை என்று கூறி தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் புறக்கணிப்பு முடிவை முன்பே அறிவித்து விட்டது.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் எந்த சூழ்நிலையிலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தினைக் காக்கப் போராடுவோம். சிறப்பு சட்டப் பிரிவு என்பது எங்கள் மக்களுக்கும் சமூகத்திற்கும் வாழ்வா சாவா பிரச்சனை என்றால், ஜனநாயகம் என்பது வாழ்வாதாரம் ஆகும், இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தப்படுவது என்பது, குறிப்பிட்ட அமைப்புகளின் நமபிக்கைத்தன்மையை சிதைப்பதுடன் அவை உருவாக்கப்பட்ட நோக்கங்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.  முடிவுக்கு வந்து விடும்

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே, எந்த காரணத்தின் பொருட்டும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கான சிறப்பு சட்டப் பிரிவு 35A நீக்கப்பட்டால், ஆட்சியினை விட்டு வெளியேறி விடுவோம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தோம்.  இந்தியாவுடனான எங்கள் உறவு என்பது அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வழியிலமைந்துள்ளது. குறிப்பிட்ட சட்டம் நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முடிவுக்கு வந்து  விடும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.      

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து