பொங்கலுக்குள் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வெள்ளையடித்து தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018      தமிழகம்
sengottayan 2017 09 08

ஈரோடு : வரும் பொங்கலுக்குள் அனைத்து பள்ளிகளும் தூய்மை செய்து வெள்ளை அடிக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சுத்தம் செய்ய நடவடிக்கை

தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவையான நிதி உதவியை நாங்கள் செய்து வருகிறோம். ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற அந்த நிதிகளை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தலா 30,000, 50,000 என அந்தப் பள்ளிகளின் நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வருகிறோம். அப்படி உயர்த்தி தொடரும் நிதியை வைத்துக் கொண்டு துப்புரவு பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து கொள்ள அந்தந்த பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது எதிர்காலத்தில் பள்ளி கழிப்பிடங்கள் சுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

மாணவர்களின் கழிப்பிடம் சுகாதாரமாக இருக்க இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன அதில் 82 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். எனவே பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து விட முடியாது படிப்படியாகத்தான் செய்ய முடியும்.  பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து 4 நாட்கள் முன்பு முதல்வர் ஒரு கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். எந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்காக ஏறத்தாழ தமிழகம் முழுவதும் 2000 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பகுதி நேர ஆசிரியர்களாக ரூ 7,500 சம்பளத்தில் நியமித்துக் கொள்ளலாம் என்று ஆணை வழங்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம் இருக்காது

அதற்கான பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளிகளில் காலிப் பணியிடம் என்று எதிர்காலத்தில் இருக்காது. இது மட்டுமல்ல மகப்பேறுக்கு 9 மாத விடுமுறைக்கு செல்லும் பெண் ஆசிரியைகளுக்கு பதிலாக அந்த விடுப்பில் கூட தற்காலிகமாக இந்த ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளையடித்து தரப்படும்

பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் பொங்கலுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மை செய்யும் வகையில் வெள்ளையடித்து தரப்படும். இதற்காக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய ஆயிரத்து 1500 கோடி ரூபாயில் மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ள 102 கோடி ரூபாய் போக மீதியுள்ள தொகை பெறுவதற்காக நான் மத்திய மந்திரியை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து