இடதுசாரி ஆதரவாளர்களின் வீட்டுக்காவல் வரும் 17-ம் தேதி வரை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Supreme Court(N)

புது டெல்லி : மகராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மகராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி, இடதுசாரி ஆர்வலரும், எழுத்தாளருமான வரவர ராவ் உள்பட 5 பேரை மகராஷ்டிர காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.  இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து 5 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில்  6-ம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, 6-ம் தேதி நடைபெற்ற வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக்காவலை 12-ம் தேதி வரை நீட்டித்து ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களது வீட்டுக்காவலை மேலும் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து