முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோயால் மரணமடைந்த மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஷெரீப்புக்கு பரோல்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லமாபாத், புற்றுநோயால் மரணமடைந்த மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்நிலையில், தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நவாஸ் ஷரிப்.அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது.

சுஷ்மா சுவராஜ் இரங்கல்

நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து