வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால் அனைத்து அதிகாரிகளுடன் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.தலைமையில் ஆலோசனை.

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      தேனி
12 kambam news

  கம்பம்,- தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால் அனைத்து அதிகாரிகளுடன் ஆர்.டி.ஓ.சென்னியப்பன் தலைமையில் ஆர்.டி.ஓ  ஆலோசனைக் கூட்டம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில் அனைத்து அதிகாரிகளும் முன் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.இதில் எடுக்கப்பட்டமுடிவுகள் விபரம் வருமாறு.உத்தமபாளையம்,போடி தாலுகாக்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்கினால் இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்தும் இடர்பாடுகளில் இருந்தும் மக்களை காப்பாற்றிட தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை அனைத்துத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடகிழக்கு பருவ மழை காலங்களில் அதிகளவில் வெள்ளம் ஏற்படுத்தக் கூடிய பள்ளமான இடங்கள் போன்ற வற்றை கண்டறிந்து அங்கெல்லாம் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுப்பதற்கு வருவாய்த் துறை மற்ற துறை அதிகாரிகளை ஆலோசிக்க வேண்டும் வெள்ளம் வரக் கூடிய இடங்கள் முன் கூட்டியே கண்டறியப்பட்டுள்ளது.இது பிரச்சனையின்றி செல்வதற்கு இடையூறுகள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை அகற்ற வேண்டும் தீயணைப்புத் துறையினர் புயல்,வெள்ளம் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிட ஓத்திகை நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் ஆற்று ஓரங்கள் மக்கள் இடரான இடங்களில் வாழக்கூடிய இடங்களை தேர்ந்தெடுத்து அதனை செய்ய வேண்டும் அனைத்து கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மழை மானிகள் எந்த இடங்களில் எல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் சென்று இது உரிய முறையில் செயல்படுகிறதா என்பதை பொதுப்பணித்துறை வருவாய்த்துறை ஆய்வு செய்ய வேண்டும்.மழைக் காலங்களில் நிலச்சரிவு சாலைகள் அரிப்பு போன்றவை ஏற்பட்டால் இதனை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை தயாராக இருக்க வேண்டும் போர்க்கால நடவடிக்கை எடுத்து மரங்கள் சாய்தலை அப்புறப்படுத்த வேண்டும்.நிலச்சரிவு போன்றவற்றை சரி செய்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.மழைக் காலங்களில் பொது விநியோகத்துறை யினர் தேவையான மண்ணெண்ணை,கோணிப்பைகள் போன்றவை உள்ளதா என்பதை சரி பார்த்து உணவு பொருட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்ட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து