பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
modi pm 2017 8 27

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இந்திய பண மதிப்பு வீழ்ச்சிக்கு இடையே நாட்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர்...

இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய கொள்கைக் குழு துணைத் தலைவர் ராஜீவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியத்துவம்...

அமெரிக்க டால்ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் அணிவகுத்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முக்கிய முடிவுகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து