முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 28 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

மும்பையில்  மும்பையில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர். மும்பையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மும்பை நகர வீதிகள் தோரணங்கள் மற்றும் மின்னொளி விளக்கு அலங்காரங்களில் ஜொலிக்கின்றன. முக்கிய வீதிகளில் நிறுவப்பட்டு உள்ள சர்வஜனிக் மண்டல்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் எழுந்தருள செய்யப்பட்டு இருக்கின்றன. சிற்ப கலைக்கூடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து