முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு நேற்று 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெரிய கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. அந்த கொழுக்கட்டையை இரண்டாக பிரித்து, உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ, மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ என படைக்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

முன்னதாக நேற்று காலை 9மணியளவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் கட்டி கொழுக்கட்டையை மலை உச்சிக்கும், அடிவாரத்திற்கும் தூக்கி சென்று உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு வைத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மலைக்கோட்டை கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெகு விமரிசையாக...

வருகிற 26-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதில் தினமும் விநாயகர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போல் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து