உலகின் மிகப் பழமையான ஓவியம் தென்னாப்பிரிக்க பாறையில் கண்டுபிடிப்பு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      உலகம்
The oldest painting discovery 14-09-2018

தென்னாப்பிரிக்கா:மனித குலத்தின் மிகப் பழமையான ஓவியத்தை தென்னாப்பிரிக்காவிலுள்ள மிகச் சிறிய பாறை துண்டின் மீது கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியமாக கருதப்படும் இது, ஒரு கல்லின் மீது குறுக்குக்கோடு போன்று சிவப்பு நிற களிமண் கலவையை கொண்டு வரையப்பட்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் தெற்கு கடலோர பகுதியிலுள்ள ப்லோம்போஸ் என்ற குகையில் கிட்டத்தட்ட ஹேஸ்டேக் வடிவில் காணப்படும் அந்த ஓவியத்தின் சிறு துண்டை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மனித குலத்தின் நவீன அறிவாற்றலின் ஒரு பிரதான உதாரணம் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து